வியக்கவைக்கும் விலையில் மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் அறிமுகம்.!

மோட்டோரோலா நிறுவனம் அதன் மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை வியக்கவைக்கும் விலையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இதனுடன் டர்போ பவர் பேக் மோட்டோ மோட் இதனுடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷட்டர்ஷீல்ட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்(2560 x 1440)பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேகை சென்சார் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்னாப்டிராகன் 835:

ஸ்னாப்டிராகன் 835:

மோட்டோ இசெட்2 போர்ஸ் பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12 டூயல் எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 3490எம்ஏஎச்:

3490எம்ஏஎச்:

மோட்டோ இசெட்2 போர்ஸ் பொறுத்தவரை 3490எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் மோட்டோ டர்போபவர் பேக் மாட் அறிமுகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
விலை:

விலை:

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.34,999-ஆக உள்ளது.

Comments