சாம்சங், சோனி, எல்ஜி டிவிக்களை ஓரங்கட்டும் சியோமி மி எல்இடி டிவி 4 (விலை, அம்சங்கள்).!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது சியோமி நிறுவம், மேலும் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். தற்சமயம் அந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய சியோமி மி எல்இடி டிவி 4 மாடலை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. மேலும் பல்வேறு
சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த டிவி மாடல்.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஹச்.டி.ஆர் தொழில்நுட்பம் மற்றும் 4.9 மில்லிமிட்டர் அளவு தடிமானக உள்ளது இந்த புதிய சியோமி டிவி. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சார்ந்து இருக்கும் பேட்ச்வால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் டீப் லெர்னிங் வழிமுறை கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 சியோமி மி எல்இடி டிவி 4:

சியோமி மி எல்இடி டிவி 4:

சியோமி மி எல்இடி டிவி 4 மாடல் பொதுவாக பேட்ச்வால் தொழில்நுட்பம் கொண்டு இயங்குவாதல் செட்-டாப் பாக்ஸ் மற்றும் இண்டர்நெட்டில் கிடைக்கும் தரவுகளை ரிமோட் மூலம் தேர்வு செய்து பல்வேறு வீடியோக்களை பார்க்க முடியும்.
 ரிமோட்:

ரிமோட்:

புதிய சியோமி டிவியின் ரிமோட் பொறுத்தவரை ப்ளூடூத் மற்றும் 11பட்டன் அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ் அனுபவத்தை ஒற்றை ரிமோட் வழங்குவதால், ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட ரிமோட் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இந்தியா:

இந்தியா:

குறிப்பாக இந்தியாவில் கிடைக்கும் அனைத்து செட்-டாப் பாக்ஸ்களை இயக்கும் வகையில் இந்த சியோமி மி டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆங்கிலம் தவிர 14 இந்திய மொழிகளில் டிவியை இயக்கும் வசதி இடம்பெற்றுள்ளது. ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், வூட், சோனி லிவ்
போன்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளதால் அவற்றின் தரவுகளை மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.
டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த சியோமி மி எல்இடி டிவி 4 பொதுவாக 55-இன்ச் 4கே டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
குவாட்கோர்:

குவாட்கோர்:

புதிய சியோமி டிவியில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் ஏ53 எஸ்ஒசி அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-டி830 எம்பி2 ஜிபியு இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:

2ஜிபி டிடிஆர்4 டூயல்-சேனல் ரேம் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு(இஎம்எம்சி 5.1) ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் ப்ளூடூத் எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
 டால்பி ஆடியோ ஸ்பீக்கர்:

டால்பி ஆடியோ ஸ்பீக்கர்:

2x 8Wடால்பி ஆடியோ ஸ்பீக்கர், டிடிஎஸ்-எச்டி இவற்றுள் அடக்கம், மேலும் சாம்சங், சோனி, எல்ஜி டிவிக்களை விட பல்வேறு சிறப்பம்சங்களை
கொண்டுள்ளது சியோமி டிவி.
Instagram Simple Tips and Tricks (TAMIL)
 விலை:

விலை:

சியோமி மி எல்இடி டிவி 4 விலைப் பொறுத்தவரை ரூ.39,999-எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு மி.காம் பிளிப்கார்ட் போன்ற வலைதங்களில் பிப்ரவரி 22-ம் தேதி முதல் இந்த டிவி கிடைக்கும்.

Comments