ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதியுடன் வெளிவரும் மோட்டோ ஜி6 பிளே.!

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் மாடலுக்கு என்சிசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மோட்டோ ஜி6 , மோட்டோ ஜி6 பிளஸ், மோட்டோ ஜி6 பிளே போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.
மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனின் மாடல் எண் பொறுத்தவரை எக்ஸ்டி-1922 எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

 மோட்டோ ஜி6 பிளே :

மோட்டோ ஜி6 பிளே :

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்
1280×720பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 430:

ஸ்னாப்டிராகன் 430:

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா அமைப்பு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Comments