5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் எச்டிசி டிசையர் 12.!

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ்(MWC)-நிகழ்ச்சியில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவருவதால் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போன் சாதனம் 5.5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம்
அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

இக்கருவி மீடியாடெக் எஸ்ஒசி செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி , மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
2730எம்ஏஎச்:

2730எம்ஏஎச்:

எச்டிசி டிசையர் 12 ஸ்மார்ட்போனில் 2730எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்
விலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Comments