விண்டோஸ் லேப்டாப் யூஸ் பண்ணா மட்டும் போதுமா.? இந்த ஆப்ஸ்லாம் இருக்கா.?

இப்போது உங்கள் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு தகுந்த பல்வேறு ஆப்ஸ் பயன்பாடுகள் மற்றும் பல்வேறு சாஃப்ட்வேர் அம்சங்கள் இணையதளத்தில் மிக அதிகமாக உள்ளன. இவற்றில் குறிப்பிட்ட திறமை வாய்ந்த ஆப்ஸ் மற்றும் சாஃப்ட்வேர் அம்சங்களை பயன்படுத்துவது மட்டும் நல்லது.
விண்டோஸ் இயங்குதளங்களில் இப்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது, அவை நமது கணினிகளை பாதுகாப்புடன் இயக்க உதவுகிறது. மேலும் உங்கள் கணினிக்கு பயனுள்ள ஆப்ஸ் மற்றும் விண்டோஸ் சாஃப்ட்வேர் அம்சங்களை பார்ப்போம்.
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிளக்ஸ்:

பிளக்ஸ்:

முதலில் நாம் பார்ப்பது பிளக்ஸ் (f.lux) என்ற ஒரு அப்பிளிகேஷன், நீங்கள் இரவு நேரங்களில் லேப்டாப், கணினி போன்ற சாதனங்களை பயன்படுத்தினால் இந்த அப்பிளிகேஷன் கண்டிப்பாக உதவும். அதவாது லேப்டாப், கணினி போன்ற சாதனங்களை இரவு நேரம் பயன்படுத்தும்போது உங்கள் அரைக்கு தகுந்த screen brightness-ஐ மாற்றியமைக்கும் தன்மை கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு காலை நேரம் சாதாரண screen-நிலைக்கு கொண்டுவரும். மேலும் இவற்றில் உள்ள ஒரு தனிச்சிறப்பு
என்னவென்றால் உங்கள் இருப்பிடத்தின் பின் நம்பர் தெரிவித்தால் சூரிய உதயம் , சூரிய அஸ்தமனம் போன்ற அனைத்து தகவல்களையும் கொடுக்கும் திறமைக் கொண்டவையாக உள்ளது. மேலும் பிளக்ஸ் (f.lux) அப்பிளிகேஷன் சிறந்த பாதுகாப்பு அம்சமாகும்.
 பிரீம் விண்டோஸ்:

பிரீம் விண்டோஸ்:

பிரீம் விண்டோஸ் (Preme for windows) அப்பிளிகேஷன் பொறுத்தவரை உங்கள் கணினியில் மிக அருமையாக பயன்படுத்த முடியும். அதன்படி கணினியில் டச் ஸ்லைடு விண்டோவைச் செயல்படுத்தலும், மினிமிஸ் பொத்தானை இழுக்கவும் அல்லது நகர்த்தவும் பயன்படும். உங்கள் கணினியில் உள்ள மவுஸ் செயல்பாடுகளை குறப்பிட்ட தொழில்நுட்பம் மூலம் இயக்க உதவுகிறது. மேலும் உங்கள் கணினியின் ஒலியை மாற்றியமைக்க இந்த அப்பிளிகேஷனை பயன்படுத்த முடியும்.
 மைக்ரோசாஃப்ட் ஸ்னிப்:

மைக்ரோசாஃப்ட் ஸ்னிப்:

இப்போது அனைத்து இடங்களிலும் விண்டோஸ் 10 இயங்குதளம் அதிகமாக பயன்படுகிறது, அதன்படி அவற்றுள் கண்டிப்பாக ஸ்கீரின் ஷாட் பயன்பாடுகள் இருக்கும், மேலும் நாம் அடுத்து பார்ப்பது ஸ்கீரின் ஷாட் சார்ந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட அப்பிளிகேஷன். இணையத்தில் மைக்ரோசாஃப்ட் ஸ்னிப் எனும் அப்பிளிகேஷன் கிடைக்கிறது, இவற்றில் கூடுதலான சில சிறப்பம்சங்கள் உள்ளது, அதவாது வெப்கேம், வாய்ஸ் ரெக்கார்டிங், எடிட்டிங் மற்றும் ஸ்கீரின் ஷாட் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
கிளிப் எக்ஸ்:

கிளிப் எக்ஸ்:

கிளிப் எக்ஸ் (Clip X) அப்பிளிகேஷன் பொறுத்தவரை இணையதளத்தில் நீங்கள் படிக்கும் செய்திகள், குறிப்புகள், தகவல்கள் போன்ற அனைத்தையும் சேமிக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் இந்த அப்பிளிகேஷனை தினசரி எளிமையாக பயன்படுத்த முடியும்.
Instagram Simple Tips and Tricks (TAMIL)
ஃபென்சஸ் :

ஃபென்சஸ் :

உங்கள் கணினியில் தேவையான கோப்புகளை வைக்க இந்த ஃபென்சஸ் (Fences) உதவி செய்யும். இணையதளத்தில் எளிமையாக பதிவிறக்கம் செய்து இவற்றை பயன்படுத்த முடியும்.

Comments